என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளிகொண்டாவில் பேரூராட்சி கூட்டம்
    X

    பள்ளிகொண்டாவில் பேரூராட்சி கூட்டம்

    • பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
    • வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்

    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டா பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நேற்று பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது . கூட்டத்திற்கு பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி தலைமை தாங்கினார்.

    துணைத் தலைவர் வசீம்அக்ரம் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் பேரூராட்சி கணினி ஆப்ரேட்டர் சந்தோஷ் முக்கிய தீர்மானங்களை வாசித்தார்.

    இதில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பள்ளிகொண்டா பேரூராட்சியில் ரூ.1.30 கோடி ஒதுக்கீட்டில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் ரூ.34.50 லட்சத்தில் ஈரக்கழிவுகள் செயலாக்க பணிகள் மேற்கொள்ளுதல், 15-வது நிதிக்குழு மானியத்தில் ரூ.18.50 லட்சத்தில் 18 வார்டுகளிலும் புதிய கல்வெட்டு அமைத்தல், 5 வார்டுகளில் புதிய போர்வெல் மற்றும் சின்டெக்ஸ் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இக்கூட்டத்தில் பேரூராட்சி பணியாளர்கள் உட்பட அனைத்து வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×