search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி தீவிரம்
    X

    பழைய காட்பாடி சுடுகாட்டில் உள்ள நவீன எரிவாயு தகன மேடை கட்டிடம். (அடுத்த படம்) வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 120 அடி உயர புகைப் போக்கி.

    நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி தீவிரம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கட்டிடப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டது
    • 120 அடி உயரத்தில் புகை போக்கும் குழாய் அமைக்கப்பட்டுள்ளது

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சியில் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சுடுகாடு மற்றும் தொரப்பாடியில் நவீன எரிவாயு தகன மேடைகள் உள்ளன. காட்பாடி பகுதியில் நவீன எரிவாயு தகன மேடை இல்லை. இதனால் இறந்தவர்களின் உடலை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள எரிவாயு தகன மேடையில் தகனம் செய்து வருகின்றனர்.

    தற்போது மாநகராட்சி சார்பில் பழைய காட்பாடி சுடுகாடு பகுதியில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அதற்கான கட்டிடப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டன.

    மாநகராட்சியில் இதுவரை இல்லாத அளவிற்கு பழைய காட்பாடி நவீன ஏரிவாயு தகனமேடை வளாகத்தில் 120 அடி உயரத்தில் புகை போக்கும் குழாய் அமைக்கப்ப ட்டுள்ளது.

    தற்போது உடலை தகனம் செய்யும் எந்திரம், காற்று மாசு நீக்கும் எந்திரம், கியாஸ் தயாரிப்பு கூடம், பாதுகாப்பு அறை போன்றவை தயாராகி வருகிறது.

    இதனை மாநகராட்சி கமிஷனர் அசோக் குமார் மற்றும் அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து வருகின்றனர். இன்னும் 2 மாத காலத்திற்குள் பழைய காட்பாடியில் உள்ள நவீன எரிவாயு தகன மேடை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×