என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் கார்த்திகேயன் எம். எல். ஏ, மேயர் சுஜாதா, கமிஷனர் அசோக் குமார் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்.
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் எம்.எல்.ஏ., மேயர் திடீர் ஆய்வு
- பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
- அதிகாரிகள் உடன் இருந்தனர்
வேலூர் :
வேலூர் புதிய பஸ் நிலையம் கடந்த மாதம் திறக்கப்பட்டது.அங்கிருந்து சென்னை மார்க்கமாக செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பஸ் நிலையத்தில் இறுதி கட்ட பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. செல்லியம்மன் கோவில் பகுதியில் சிமெண்டு தரைதளம் மற்றும் கால்வாய் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
இதனை கார்த்திகேயன் எம்.எல். ஏ., மேயர் சுஜாதா ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
புதிய பஸ் நிலையத்தில் மறுபுறம் காட்பாடி செல்லும் சாலையில் பாதாள சாக்கடை பணிக்காக பெரிய பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.இதனால் அந்த சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
அந்த இடத்தில் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மற்றும் மேயர் சுஜாதா பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
ஆய்வின்போது மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.






