என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாகன விபத்து இழப்பீடாக ரூ.13 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி வசந்த லீலா வழங்கினார்.
சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் லோக் அதாலத்
- 11 கோர்ட்டுகளில் மக்கள் நீதிமன்றம்.
- ரூ.1.92 கோடி இழப்பீடு.
வேலூர்:
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 11 கோர்ட்டுகளில் மக்கள் நீதிமன்றம் இன்று நடந்தது. இதில் விபத்து இழப்பீடு நில ஆர்ஜிதம் மற்றும் வங்கி கடன் உள்ளிட்ட வழக்குகள் தீர்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
சத்துவாச்சாரியில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், சட்டப் பணிகள் ஆணைக் குழு தலைவருமான வசந்த லீலா தலைமை தாங்கி திருப்பத்தூரில் நிலம் ஆர்ஜிதம் செய்த வழக்கில் ரூ.1.92 கோடி இழப்பீடாக வழங்கினார்.
சத்துவாச்சாரியை சேர்ந்த ரமேஷ் என்பவர் வாகன விபத்தில் இறந்ததால் அவரது மனைவியிடம் ரூ.13 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
Next Story






