என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் வெங்கடேஸ்வரா பள்ளியில் நில அளவையர் தேர்வு எழுதியவர்களை படத்தில் காணலாம்.
வேலூரில் 9 மையங்களில் நில அளவையர் தேர்வு
- 2,547 பேர் எழுதினர்
- போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது
வேலூர்:
வேலூரில் இன்று 9 மையங்களில் நில அளவையர் பணிக்கான தேர்வை 9 மையங்களில் நடந்தது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் 798 கள ஆய்வாளர், 236 வரைவோர், 55 சர்வேயர் மற்றும் உதவி வரைவாளர் பதவிகள் என 1,098 காலி பணியிடங்களுக்கான தேர்வு இன்று நடந்தது.
வேலூர் உட்பட 15 மாவட்டங்களில் மையங்கள் அமைக்கப்பட்டன.
அதன்படி தேர்வு இன்று நடந்தது. வேலூர் மாவட்டத்தில் கொணவட்டம் அரசு பள்ளி, தோட்டப்பாளையம் அரசு மகளிர் பள்ளி, சைதாப்பேட்டை கோடையிடி குப்புசாமி பள்ளி, ஊரீசு மேல்நிலைப்பள்ளி, வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, சத்துவாச்சாரி சாந்திநிகேதன் பள்ளி, அலமேலுமங்காபுரம் சினேகதீபம் பள்ளி, ஓட்டேரி ெசவன்த்டே பள்ளி, விருபாட்சிபுரம் தேசியா மெட்ரிக்பள்ளி ஆகிய 9 இடங்களில் தேர்வு நடந்தது.
காலை, மாலை என இருவேளைகளும் முதல் தாள் மற்றும் 2ம் தாள் தேர்வு நடந்தது.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 2,547 பேர் தேர்வு எழுதினர்.
தேர்வு மையங்களில் செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் கருவிகள் எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டது. தேர்வு மையத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.






