என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருபானந்த வாரியார் பிறந்த நாளையொட்டி காட்பாடி காங்கேய நல்லூரில் அவரது நினைவிடத்தில் உள்ள சிலைக்கு கதிர் ஆனந்த் எம்.பி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கார்த்திகேயன் எம். எல்.ஏ மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.
கிருபானந்த வாரியார் பிறந்தநாள் விழா
- சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
- அதிகாரிகள் பங்கேற்பு
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடி காங்கேயநல்லூர் பகுதியில் 64- வது நாயன்மார்களில் ஒருவரும், ஆன்மீக சொற்பொழிவு ஆற்றியாவருமான திருமுருக கிருபானந்த வாரியார் சாமிகள் அவதரித்த 117 வது பிறந்த நாள் விழா இன்று அனுசரிக்கப்பட்டது.
அவர் அவதரித்த காங்கேயநல்லூரில் உள்ள அவருடைய நினைவிடத்தில், உள்ள திருவுருவ சிலைக்கு, வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த், கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மற்றும் வேலூர் மாநகர மேயர் சுஜாதா ஆனந்தகுமார், ஆகியோர் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும் வேலூர் மாநகராட்சி கமிஷனர் அசோக் குமார், வள்ளிமலை ஆதினம் மற்றும் அரசு அதிகாரிகள், மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பொதுமக்கள் அரசியல் பிரமுகர்கள் ஆகியோர் அவரது திருவுருவ சிலைக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசு விழாவாக அனுசரிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது.
அதனை அடுத்து 2-வது ஆண்டாக இன்று வாரியாரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.






