என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேம்பால பணியை விரைந்து முடித்த அதிகாரிகளுக்கு கதிர் ஆனந்த் எம்.பி. பாராட்டு
- 1 மாத காலமாக பணி நடைபெற்று வந்தது.
- கலெக்டர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு
வேலூர்:
வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காட்பாடி ரெயில்வே மேம்பாலம் பழுது ஏற்பட்டதன் காரணமாக சீரமைப்பு பணிகள் கடந்த 1 மாத காலமாக நடைபெற்று வந்தது. தற்போது, பாலம் சீரமைக்கும் பணி விரைந்து முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மிகவும் சிரமப்படுவதால் அதனை கருத்தில் கொண்டு இன்று இருசக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
4 -ந் தேதி முதல் நான்கு சக்கர வாகனம் மற்றும் பஸ்கள் செல்லலாம்.
சரக்கு மற்றும் கனரக வாகனங்கள் கலெக்டர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வுக்கு பிறகு அனுமதிக்கப்படும் என்பதை தெரிவித்து க்கொள்கிறேன்.
பாலம் சீரமைப்பு பணியை விரைந்து முடித்த அதிகாரிகள், பணிக்காக ஒத்துழைப்பு அளித்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு எனது நன்றியை தெரிவித்து க்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






