search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவர்கள் விடாமுயற்சி தன்னம்பிக்கையுடன் படிக்க வேண்டும்
    X

    மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய காட்சி.

    மாணவர்கள் விடாமுயற்சி தன்னம்பிக்கையுடன் படிக்க வேண்டும்

    • முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி பேச்சு
    • குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது

    வேலூர்:

    தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட அமைப்பின் சார்பில் 30-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு ஆக்சிலியம் கல்லூரி வளாகத்தில் நடந்தது.

    இந்த அறிவியல் மாநாட்டினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தொடங்கி வைத்தார்.

    அவர் பேசியதாவது:-

    மாணவர்கள் ஊக்கமுடன் முயற்சி மேற்கொண்டால் மிக சிறந்தவர்களாக வளர முடியும். தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் வேண்டும். படிக்க இயலாத மாணவர் என கூறப்பட்ட மாணவர் தான் மிக சிறந்த அறிவியல் விஞ்ஞானியாக மாறினார். அவர்தான் தாமஸ் ஆல்வா எடிசன். அனைவரிடமும் ஆற்றல் இருக்கிறது பயிற்சி முயற்சி தேவை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் அமுதா தலைமை தாங்கினார். ஆக்சிலியம் கல்லூரியின் துணை முதல்வர் சுமதி துணைத் தலைவர்கள் விஸ்வநாதன் செ.நா.ஜனார்த்தனன் செயலாளர் டி.முனுசாமி மாவட்ட நிர்வாக குழு பி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

    மாநில பொதுச் செயலாளர் எஸ் சுப்பிரமணி மாநில செயலாளர் சேதுராமன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்

    மாவட்ட பொருளாளர் டி.மஸ்தான் சா.குமரன் வீரா.குமரன் எம்.ஜி.ராமகிருஷ்ணன் ஆக்சிலியம் கல்லூரி கிளை தலைவர் மற்றும் முதல்வர் ஜெயசாந்தி செயலாளர் காயத்ரி பொருளாளர் உமாசந்திரா மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினர்.

    முடிவில் மாவட்ட பொருளாளர் டி.மஸ்தான் நன்றி கூறினார்.

    Next Story
    ×