என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  குடியாத்தம், பள்ளிகொண்டாவில் லாரி, பைக்கில் குட்கா கடத்தல்
  X

  குடியாத்தம், பள்ளிகொண்டாவில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களையும், கைதானவர்களையும் படத்தில் காணலாம்.

  குடியாத்தம், பள்ளிகொண்டாவில் லாரி, பைக்கில் குட்கா கடத்தல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 5000 கிலோ போதைபொருள் பறிமுதல்
  • போலீசார் விசாரணை

  குடியாத்தம்:

  வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.

  அப்போது கொல்லமங்கலம் கிராமம் அருகே கண்டெய்னர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது.

  அதன் அருகே போலீசார் சென்றனர். அப்போது அங்கிருந்து 5 பேர் கும்பல் காரில் வேகமாக தப்பி சென்றனர். லாரியின் அருகே நின்று கொண்டிருந்த பெங்களூரை சேர்ந்த அரவிந்த் (வயது 26) ஓசூரைச் சேர்ந்த விவேகானந்தன் (36) ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

  கண்டெய்னர் லாரியில் தின்பண்டங்கள் அட்டை பெட்டிகளுக்கு பின்னால் மறைத்து குட்கா கடத்தி வந்தது தெரிய வந்தது. தெரியவந்தது.மொத்தம் 5000 கிலோ எடை கொண்ட ரூ.60 லட்சம் மதிப்புள்ள குட்கா மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

  குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையில் போலீசார் நேற்று சித்தூர் கேட் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது பைக்கில் குட்கா கடத்தி வந்த நுஸரத் சாகித் (46) என்பவரை மடக்கிபிடித்தனர். அவர் அளித்த தகவலின் பெயரில் இப்ராஹிம் சாஹிப் தெருவில் உள்ள ஒரு வீட்டில் ரூ.2.30 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்தனர். அங்கிருந்த பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

  இது தொடர்பாக முனவர் பாஷா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். கள்ளூர் குறிஞ்சிநகரை சேர்ந்த ஜமால் (29) நெல்லூர் பேட்டை சேர்ந்த நேரு (50) ஆகியோரும் குட்கா கடத்தியதாக கைது செய்யப்பட்டனர்.

  Next Story
  ×