என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீர தீர விருதுக்கு 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்
- வருகிற நவம்பர் 10-ந் தேதி கடைசி நாள்
- கலெக்டர் தகவல்
வேலூர்:
வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-
வீர தீர செயல்புரிந்த 13 வயதிற்கு மேல் 18 வயதுக்கு உட் பட்ட பெண் குழந்தை களை சிறப்பிக்கும் வகையில், மாநில அரசின் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுக்கு தகுதியான 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளிடம் இருந்து நவம்பர் 10-ந் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன.
இதற்கான விண்ணப்பங் களை மாவட்ட சமூகநல அலுவலகம், கலெக்டர் அலுவலகம் பி-பிளாக் சத்துவாச்சாரி, வேலூர் என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உத வுதல், பெண் குழந்தை தொழிலா ளர் ஒழிப்பு, பெண் குழந்தை திரும ணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், பெண்க ளுக்கு எதிரான சமூக அவ லங்கள், மூட நம்பிக்கை உள்ளிட்ட வைக்கு தீர்வு காண ஓவியங்கள், கவிதை, கட்டுரைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் விருதுக்கு தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






