என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் புதிய பஸ் நிலையம் பாலாற்றின் கரையோரம் தடுப்பு வேலி அமைப்பது குறித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மேயர் சுஜாதா ஆய்வு செய்த காட்சி.
பாலாற்றில் குப்பை கொட்டுவதை தடுக்க வேலி
- கலெக்டர், மேயர் ஆய்வு
- அரசு நிதி ஒதுக்கியவுடன் பணிகள் தொடங்கப்படும் என தகவல்
வேலூர்:
வேலூர் மாநகராட்சி பகுதியில் பாலாற்றில் பல்வேறு இடங்களில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் பாலாறு மாசுபட்டு வருகிறது. பாலாற்றில் குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
பாலாற்றில் கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டி மாசுபடுத்துவதை தடுக்க உடனடியாக கம்பி வேலி அமைக்க வேண்டும் என்றும் நீர்வளத் துறை அமைச்சரிடம் ஒப்புதல் பெற்று பாலாற்றங்கரையில் உடனடியாக கம்பி வேலி அமைக்கப்படும் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று காலை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மேயர் சுஜாதா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சுடுகாட்டுப் பகுதியில் பாலாற்றில் குப்பை கொட்டுவதை தடுக்க தடுப்பு வேலிகள் அமைப்பது குறித்து ஆய்வு செய்தனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பாலாற்று பகுதியில் தடுப்பு வேலி அமைக்க எவ்வளவு நிதி தேவை ப்படும் என்பது குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும். அரசு நிதி ஒதுக்கியவுடன் பணிகள் தொடங்கப்படும் என்றனர்.






