என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆடி பரணி கிருத்திகையொட்டி ரத்தினகிரி கோவில், வேலூர் கோட்டை கோவில், சைதாப்பேட்டை பழனி ஆண்டவர் கோவிலில் முருகர் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.
ஆடி வெள்ளியொட்டி அம்மன் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்
- சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தது
- பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர்
வேலூர்:
ஆடி மாதத்தின் முதல் வெள்ளியான இன்று அம்மன் கோவில்களில் சிறப்பு அலங்காரம், பூஜை நடந்தது. பக்தர்கள் கூட்டம் கூட்டமாக கோவில்களுக்குச் சென்று வழிபட்டனர்.
ஆடி வெள்ளி
ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் மிகவும் விசேஷமானது. ஆடி மாத முதல் வெள்ளியான இன்று வேலூர், திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் ஏராளமான பக்தர்கள் குவிந்து அம்மனை வழிபட்டனர். வேலூர் கோட்டை கோவிலில் இன்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது.
அம்மன் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்
வெட்டுவானம் எல்லையம்மன் கோவிலில் ஆடிவெள்ளியொட்டி சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேலூர் மாவட்டத்தில் ஆடி மாத முதல் வெள்ளிக் கிழமையையொட்டி, இன்று 100-க்கும் மேற்பட்ட அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பெண்கள் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.பக்தர்கள் காவடி கரகம் எடுத்து வந்து தரிசனம் செய்தனர்.
வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே பாலாற்றங் கரையோரத்தில் உள்ள செல்லியம்மன் கோவிலில் இன்று அதிகாலை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. செல்லியம்மன் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித் தார். ஏராளமான பெண்கள் கோவிலில் விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர். வேலூர் ஆணைகுளத்து அம்மன் கோவிலில் இன்று பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர்.
காட்பாடி ரோட்டில் உள்ள விஷ்ணு துர்கையம்மனுக்கு வெண்ணை காப்பு அலங் காரம் செய்யப்பட்டிருந்தது. தோட்டப்பாளையம் சோலாபுரி அம்மன், படவேட்டம்மன் மற்றும் டிட்டர்லைன் கருமாரி அம்மனும் சிறப்பு அலங்காரரூபத்தில் பக்தர்க ளுக்கு அருள்பாலித்தனர்.






