search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியாத்தம் பூங்குளம் மலைப்பகுதியில் 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
    X

    பூங்குளம் மலைப்பகுதியில் கள்ளச்சாராய அடுப்புகளை டி.எஸ்.பி ராமமூர்த்தி அழித்த காட்சி.

    குடியாத்தம் பூங்குளம் மலைப்பகுதியில் 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

    • போலீசார் சோதனையில் சிக்கியது
    • குற்றவாளிகளை தேடி வருகின்றனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பூங்குளம் மலைப்பகுதியில் ரகசியமாக சிலர் அடுப்புகள் அமைத்து கள்ளச்சாராயம் காய்ச்சி வருவதாகவும் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் போலீசார் சோதனைக்கு வருவதற்குள் சாராய காய்சுபவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்து தப்பி விடுவதாகவும் உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றது.

    இதைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பரண்டு ராமமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைத்தார்.

    இந்த தனிப்படையினர் கிராமப் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் கள்ளச்சாராயம் காய்ச்சினாலும் விற்றாலும் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு செல்போன் என்னை கொடுத்தனர்.

    இதனை தொடர்ந்து பூங்குளம் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சசும் தகவல் தனிப்படையினருக்கு தெரிவிக்கப்பட்டு அடிக்கடி சாராய ஊறல்களை அளித்தனர்.

    நேற்று மாலையில் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தததை தொடர்ந்து குடியாத்தம் போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் பூங்குளம் மலைப்பகுதிக்கு சென்று அதிரடியாக சோதனை செய்தபோது 15 பேரல்கள் கள்ளச்சாராயம் ஊறல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    அதிலிருந்த 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை உடனடியாக போலீசார் அழித்தனர் மேலும் அங்கு கள்ளச்சாராயம் காய்ச்ச அமைக்கப்பட்டிருந்த 2 அடுப்புகளையும் போலீசார் அடித்து உடைத்தனர். மேலும் லாரி டியூப் களிலிருந்த கள்ள சாராயத்தையும் பறிமுதல் செய்து அழித்தனர்

    கள்ளச்சாராய ஊறல்கள் காய்ச்சியது சம்பந்தமாக பூங்குளம் பகுதியைச் சேர்ந்த ராஜீவ்காந்தி, செம்மட்ட சரவணன் ஆகியோர் மீது குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    Next Story
    ×