என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஒடுகத்தூர் பேரூராட்சி கூட்டம் நடத்த காட்சி.
பஸ்நிலையம் விரிவுபடுத்த ஆக்கிரமிப்பு அகற்ற முடிவு
- மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, பேரூராட்சி மன்ற தலைவர் சத்தியாவதி பாஸ்கரன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ராமு முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் ரேணூகாதேவி பெருமாள்ராஜா வரவேற்று பேசினர்.
கூட்டத்தில், அனைத்து வார்டுகளில் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும். தற்போது, அம்ரூத் திட்டத்தில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் தொடங்கி விட்டதால் கூடிய விரைவில் வீடு தோறும் குழாய் இணைப்பு கொடுக்கும் பணிகள் முடிவடையும் உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் வாசிக்கப்பட்டது.
அப்போது, பஸ் நிலையத்தில் பஸ்கள் வந்து செல்ல கடும் நெருக்கடி நிலவி வருகிறது.
பஸ் நிலையம் விரிவு படுத்துவதால் அதனை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு களை உடனே அகற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
டெங்கு கொசுகள் அதிகம் உற்பத்தியாகும் அபாயம் உள்ளது. மழைநீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து அங்கு மழைநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
15 வார்டுகளில் கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரி தூய்மை பணிகளை தீவிரப டுத்தி டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முன்னெச்ச ரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டன,
அதேபோல், பழுதாகியுள்ள மின் மோட்டார்கள், தெரு விளக்குகளை உடனே சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கூட்டத்தில் முடிவெ டுக்கப்பட்டது.






