என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பலவன்சாத்துகுப்பம் ஏரி கரையை பலப்படுத்த கலெக்டர் உத்தரவு
    X

    பலவன்சாத்து ஏரி சீரமைப்பது குறித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்த காட்சி. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, உதவி கலெக்டர் கவிதா, தாசில்தார் செந்தில்.

    பலவன்சாத்துகுப்பம் ஏரி கரையை பலப்படுத்த கலெக்டர் உத்தரவு

    • நீர் வரத்து தொடங்கி உள்ளது
    • பொதுமக்கள் யாரும் குப்பைகள் கொட்ட அனுமதிக்க கூடாது

    வேலூர்:

    வேலூர் பலவன்சாத்து குப்பத்தில் பெரிய ஏரி உள்ளது. ஓட்டேரி அடுத்த நாயக்கநேரி, குளவிமேடு, வாணியங்குளம் ஆகிய பகுதிகளில் உருவாகும் மழை நீர் சிறு ஓடைகள் வழியாக ஓட்டேரி ஏரிக்கு வரும்.

    ஓட்டேரி ஏரியிலிருந்து வரும் உபரி நீர் மழைநீர் கால்வாய் வழியாக பலவன்சாத்து குப்பம் ஏரியை வந்தடையும்.

    இந்த ஏரி நிரம்பியதும், இங்கிருந்து வெளியேறும் உபரி நீர் மீண்டும் கால்வாய் வழியாக சென்று தொரப்பாடி ஏரியில் கலக்கிறது. இந்த பலவன்சாத்துக்குப்பம் ஏரி நகரத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. மழைக்காலங்களில் இந்த ஏரி நிரம்பும் போது, ஏரிக்கரைகளில் உடைப்பு ஏற்பட்டால் தண்ணீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்துவிடும்.

    தற்போது பருவமழை பெய்து வரும் நிலையில், பலவன்சாத்துகுப்பம் ஏரிக்கு நீர் வரத்து தொடங்கி உள்ளது.

    இந்த நிலையில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று காலை பலவன்சாத்துகுப்பம் ஏரியை திடீரென ஆய்வு செய்தார்.

    அப்போது ஏரியை சுற்றி வளர்ந்துள்ள செடி, கொடி உள்ளிட்ட முட்புதர்களை அகற்ற வேண்டும். ஏரியில் பொதுமக்கள் யாரும் குப்பைகள் கொட்ட அனுமதிக்க கூடாது.

    நிரம்பும் போது உடைப்பு ஏற்படாத வகையில் ஏரிக்கரையை பலப்படுத்த வேண்டும்.

    வருவாய்த் துறையினர் அவ்வப்போது கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, உதவி கலெக்டர் கவிதா, வேலூர் தாசில்தார் செந்தில் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×