search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேரணாம்பட்டு, பள்ளிகொண்டாவில் புதிய உழவர் சந்தைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
    X

    பேரணாம்பட்டு, பள்ளிகொண்டாவில் புதிய உழவர் சந்தைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

    • கலெக்டர், எம்.எல்.ஏ. விற்பனையை தொடங்கி வைத்தனர்
    • 16 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு, பள்ளிகொண்டாவில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள உழவர் சந்தையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.

    இதனையொட்டி, பள்ளிகொண்டாவில் நடைபெற்ற உழவர் சந்தையில் தொடக்க நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், அணைக்கட்டு எம்.எல்.ஏ. ஏ.பி. நந்தகுமார், சப்-கலெக்டர் கவிதா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி காய்கறி விற்பனையை தொடங்கி வைத்தனர்.

    மேலும், உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்ய உழவர் அடையாள அட்டைகள், எடை எந்திரங்கள் அனைத்து இலவசமாக வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசியதாவது:-

    பள்ளிகொண்டா உழவர் சந்தையில் தற்போது 16 கடைகள் அமைக்க ப்பட்டுள்ளன. புதிய உழவர் சந்தை மூலம் பள்ளி கொண்டா, வெட்டு வானம், பிராமணமங்கலம், கந்தனேரி, வேப்பங்கால், ஐதர்புரம், பசுமாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் காய்கறி, பழங்கள் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் பயன்பெறுவர்.

    வெளிச்சந்தையை விட குறைவான விலையில் காய்கறிகளை பொதுமக்கள் வாங்கி பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் வேளாண்மை துணை இயக்குனர் கலைச்செல்வி, தாசில்தார் வேண்டா, பி.டி.ஓ.க்கள் சுதாகரன், சாந்தி, பள்ளிகொண்டா பேரூராட்சி தலைவர் சுபப்பிரியா, செயல் அலுவலர் உமாராணி, அணைக்கட்டு ஒன்றிய குழு தலைவர் பாஸ்கரன், அணைக்கட்டு மத்திய ஒன்றிய செயலாளர் வெங்க டேசன், பள்ளிகொண்டா நகர செயலாளர் ஜாகீர் உசேன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

    Next Story
    ×