என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காட்பாடியில் சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிப்பு
    X

    காட்பாடி தெருக்களில் சுற்றித்திரிந்த மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்த காட்சி.

    காட்பாடியில் சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிப்பு

    • ஜெயின் கோசலாவில் மாடுகளை ஒப்படைக்கப்படும்
    • மாநகராட்சிக்கு பல்வேறு புகார்கள் தெரிவித்தனர்

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலம், 14-வது வார்டுக்கு உட்பட்ட ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் மெயின் ரோடு மற்றும் தெருக்களில் மாடுகள் சுற்றி திரிகிறது.

    செல்பவர்கள், வாகன ஓட்டிகளை மாடுகள் முட்டி விபத்து ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் மாநகராட்சிக்கு பல்வேறு புகார்கள் தெரிவித்தனர்.

    புகாரின் பேரில் மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி உத்தரவின்படி 1-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டு சாலைகளில் சுற்றித்திரிந்த 5 மாடுகள் பிடிக்கப்பட்டது.

    பிடிக்கப்பட்ட மாட்டின் அதன் உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் மாநகராட்சிக்கு அபராதமாக கட்ட வேண்டும், பணம் கட்ட தவறினால் கோட்டை சுற்று சாலையில் உள்ள ஜெயின் கோசலாவில் மாடுகளை ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    Next Story
    ×