என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர்களை அழைத்து செல்லும்போது ஆட்டோவை வேகமாக இயக்க கூடாது
- சாலை பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம்
- டிரைவர்களுக்கு அதிகாரி எச்சரிக்கை
வேலூர்:
வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர்களுக்கு சாலை பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம் முன்னிலை வகித்தார். கூட்டத்துக்கு வட்டாரபோக் குவரத்து அலுவலர் (பொறுப்பு) வெங்கடேசன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பள்ளிக்கு மாணவ- மாணவிகளை ஆட்டோவில் ஏற்றி செல்லும்போது மிகவும் பாதுகாப்பாக அழைத்து செல்ல வேண்டும்.
ஆட்டோ வில் அதிகமான மாணவர்களை ஏற்றி செல்லக்கூடாது. அதேபோன்று பள்ளிக்கு செல்வதற்கு நேரமாகி விட்டது என்று அதிவேகத்தில் ஆட்டோவை இயக்ககூடாது. மாணவர்கள் ஆட்டோவில் பயணிக்கும் போது வேகமாக சென்று பிறவாகனங்களை முந்தி செல்லவோ, வளைவு களில் வேகமாகவோ செல் லக்கூடாது.
ஆட்டோவில் தகுதிச்சான்று, பதிவுச்சான்று, ஓட்டுனர் உரிமம், இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங் களை வைத்திருக்கவேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
இதில் வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத் துக்கு உட்பட்ட ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள், ஆட்டோ டிரைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.






