என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேலும் பழைய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர்கள்.
ஆக்கிரமிப்புகள் அகற்ற ஆட்டோ டிரைவர்கள் எதிர்ப்பு
- போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர்.
- கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறல்.
வேலூர்:
வேலூர் பழைய பஸ் நிலையம் திருவள்ளுவர் சிலை அருகே ஆட்டோ டிரைவர்கள் கொடி கம்பம் நட்டு பேனர் வைத்திருந்தனர்.
இன்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக பொக்லைன் எந்திரம் கொண்டு வந்தனர். அப்போது ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து ஆட்டோ டிரைவர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு பணியில் 3 போலீஸ்காரர்கள் மட்டுமே இருந்ததால் அவர்களை போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. தொடர்ந்து நீண்ட நேரம் வாக்குவாதம் செய்து கொண்டே இருந்தனர். அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் வேடிக்கை பார்க்க நின்றதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றால் சாலையின் குறுக்காக ஆட்டோக்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஆட்டோ டிரைவர்கள் தெரிவித்தனர். மேலும் பொக்லைன் எந்திரம் முன்பாக நின்று கொண்டு கலைந்து செல்லாமல் இருந்தனர்.
இதனால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து ஆட்டோ டிரைவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.






