என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆற்காட்டில் அரிசி மற்றும் விதைத் திருவிழா கண்காட்சியை வேலூர் நறுவீ மருத்துவமனை தலைவர் ஜி.வி. சம்பத் திறந்து வைத்தார்.
அடுத்த தலைமுறை ஆரோக்கியமாக வாழ இயற்கை முறை உணவு அவசியம்- ஜி.வி.சம்பத் பேச்சு
- ஆற்காட்டில் அரிசி, விதை திருவிழா கண்காட்சி நடந்தது
- ஏராளமாேனார் கலந்து கொண்டனர்
வேலூர்:
உடல் நலத்திற்கு உகந்த உணவு உற்பத்தி அதிலும் இயற்கை உணவு உற்பத்தி, பாரம்பரிய உணவு உற்பத் தியை விவசாயிகளுக்கு பறை சாற்றும் வகையில் தொண்டை மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு தொடங் கப்பட்டது. இந்த அமைப் பின் மூலம் ஆற்காடு அரிசி மற்றும் விதைத் திருவிழா 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டு, ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு விழா ஆற்காடு தக்காங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள கே.எம்.இயற்கை வழி வேளாண் பண்ணை யில் நடைபெற்றது. இதை யொட்டி நெல், கரும்பு, தென்னை, பாரம்பரிய வேளாண் உற்பத்தி உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட அரங்குகள் அடங்கிய வேளாண் கண்காட்சி அமைக் கப்பட்டது.
தொடக்க விழாவிற்கு இலவச முதி யோர் இல்ல தலைவர் லட்சுமணன் தலைமை தாங்கினார். கூட்டமைப் பின் முதன்மை ஒருங்கி ணைப்பாளர் விமல் ஜி.நந்தகுமார், கே.எம் இயற்கை வழி வேளாண் பண்ணை நிறுவனர் கே.எம்.சாமுண்டீஸ்வரி முன்னிலை வகித்தனர்.
விழாவில் வேலூர் நறுவீ மருத்துவமனை தலைவர் ஜி.வி. சம்பத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வேளாண் கண்காட்சியை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ் மக்களின் முக்கிய அடையாளமே இயற்கை வேளாண்மை மூலம் உணவு உற்பத்தி செய்வது தான்.
தமிழர்களின் அடை யாளங்கள் தற்போது சிறிது சிறிதாக அழிந்து வருகிறது. அதில் ஒன்றுதான் பாரம்பரிய உணவு வழக்கம். இப் போது, அந்த பாரம்பரிய உணவு உற்பத்தியை தொடங்கி உள்ளனர். அதன் எதிரொலி தான் இந்த நிகழ்ச்சி.
அடுத்த தலைமுறை யினருக்கு நாம் ஆரோக்கிய வாழ்வு கொடுக்க இயற்கை முறை உணவு அவசியம். உடல் பாதிப்பு இல்லாத வகையில் ராசயன உரங்களை தவிர்த்து இயற்கை உரம் பயன்படுத்தும் நிலை வரவேண்டும். அது பற்றி இந்த திருவிழாவில் வேளாண் பெருமக்களுக்கு எடுத்து ரைக்க வேண்டும்.
பாரம்பரிய இயற்கை முறை உணவு உற்பத்தி மற்றும் விளை பொருட் களுக்கான உரிய விலைகிடைப்பது ஆகியவற்றை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இதுபோன்ற நிகழ்ச்சி கள் அதிகளவில் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், மேட்டுப் பாளையம் உயிராற்றல் வேளாண்மை பயிற்சி மைய பயிற்றுனர் முன் னோடி விவசாயி நவநீத கிருஷ்ணன், சென்னை மண் வாசனை அமைப் பின் பிரதிநிதி மேனகா, இயற்கை விவசாய அமைப்பின் கீதா பிரிய தர்ஷினி, பாரம்பரிய விதைகள் சேகரிப்பாளர் பிரியா, வெல்லூர் கிச்சன் உரிமையாளர் கே.ஜி. புண்ணியகோட்டி பலர் கலந்து கொண்டனர்.






