என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கெங்கையம்மன் சிரசு திருவிழாவில் கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது
    X

    கெங்கையம்மன் சிரசு திருவிழாவில் கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது

    • கிடாக்களையும், சேவல்களையும் பலியிட்டு கிராம மக்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    குடியாத்தம் :

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தில் கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.

    சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கெங்கையம்மன் சிரசு பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தது.

    தொடர்ந்து கோவிலில் வைக்கப்பட்ட கெங்கையம்மன் சிரசு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் குடியாத்தம் நகரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.

    நூற்றுக்கணக்கான கிடாக்களையும், சேவல்களையும் பலியிட்டு கிராம மக்கள் நேர்த்தி கடன் செலுத்தினர் இதற்கான ஏற்பாடுகளை ஊர் முக்கிய பிரமுகர்கள், விழா குழுவினர் மற்றும் தட்டப்பாறை, சின்னாலபல்லி கிராம பொதுமக்கள் ஊர் இளைஞர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×