என் மலர்
உள்ளூர் செய்திகள்

பண்டிகை விடுமுறை நாட்களில் தொடர்ந்து தாமதமாகும் ஆவின் பால் விநியோகம்
- காலை 9.30 மணி ஆகியும் விநியோகிக்கப்படவில்லை
- பால் முகவர்கள் குற்றச்சாட்டு
வேலூர்
வேலூர் சத்துவாச்சா ரியில் உள்ள ஒருங்கிணைந்த ஆவின் பால் பண்ணையில் இருந்து வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்க ளுக்கு நாளொன்றுக்கு சுமார் ஒரு லட்சம் லிட்டர் பால் வினியோகம் செய்யப்படுகிறது.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 650 க்கும் மேற்பட்ட முகவர்கள் மூலம் பால் வினியோகம் செய்யப்ப டுகிறது. இந்நிலையில் இன்று காலை சுமார் 5.30 மணிக்கு முகவர்களுக்கு செல்ல வேண்டிய பால் பாக்கெட்டுகள் பெரும்பாலான பகுதிகளுக்கு காலை 9.30 மணி ஆகியும் விநியோகிக்கப்படவில்லை. இதனால் வேலூர் சுற்றியுள்ள பால் முகவர்கள் தங்கள் சொந்த வாகனங்களில் வந்து பால் பாக்கெட்டுகளை எடுத்து சென்றனர். கால தாமதமான ஆவின் பாலால் முகவர்கள் மற்றும் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
இதே போல் கடந்த மாதத்தில் 3 நாட்கள் ஆவின் பால் விநியோகத்தில் மிகுந்த தாமதம் ஏற்பட்டது. இது போன்ற பண்டிகை விடுமுறை நாட்களில் தொடர்ந்து ஆவின் பால் விநியோகம் தாமதமாவதாகவும், இதனால் ஆவின் பால் முகவர்கள், பொது மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருவதால் இதனை தடுக்கும் வகையில் வேலூர் மாவட்ட ஆவின் நிர்வாகம் மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.






