என் மலர்
உள்ளூர் செய்திகள்

தூய்மை பணிக்காக டிராக்டர்கள் வழங்கிய காட்சி
7 ஊராட்சிகளுக்கு ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் 9 டிராக்டர்கள்
- ஒன்றிய குழு தலைவர் வழங்கினார்
- ஏராளமாேனார் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கொண்டசமுத்திரம், சீவூர், அக்ராவரம், நெல்லூர்பேட்டை, எர்த்தாங்கல், கூடநகரம் சேம்பள்ளி ஆகிய 7 ஊராட்சிகளுக்கு தூய்மை பாரத இந்தியா திட்டத்தின் கீழ் அரசு சார்பில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் தூய்மை பணிக்காக 9 டிராக்டர்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த டிராக்டர்களை ஊராட்சி மன்ற தலைவர்களிடம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.கார்த்திகேயன், ஆர்.திருமலை ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.ஊராட்சி மன்ற தலைவர்கள் அகிலாண்டேஸ்வரி பிரேம்குமார், முனிசாமி, வள்ளிநாயகி, கே.ஆர்.உமாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்வாணன் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் கலந்து கொண்டு ஊராட்சி மன்ற தலைவர்களிடம் டிராக்டர்களுக்கான சாவிகளை வழங்கியும் ஒரு டிராக்டரை இயக்கியும் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் அசோக்குமார் நன்றி கூறினார்.






