என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொள்ளை நடந்த வீடு மற்றும் சிதறி கிடந்த பொருட்கள்.
நெடுஞ்சாலை துறை ஊழியர் வீட்டில் 60 பவுன் நகை, ரூ.4 லட்சம் கொள்ளை
- திருவண்ணாமலை கோவிலுக்கு சென்ற நேரத்தில் துணிகரம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
காட்பாடி கல் புதூர் மாருதி நகரை சேர்ந்தவர் குமார். நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று கார்த்திகை தீப திருவிழா என்பதால் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்றார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு பீரோவில் இருந்த நகை பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இன்று காலை குமாரின் உறவினர்கள் வீட்டுக்கு வந்தனர். அப்போது கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து குமாருக்கு தகவல் தெரிவித்தனர்.கோவிலுக்கு சென்றிருந்த குமார் உடனடியாக வீடு திரும்பினார். உள்ளே சென்று பார்த்தபோது கொள்ளை நடந்திருப்பது தெரிய வந்தது.
இது குறித்து காட்பாடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மர்ம நபர்கள் வீட்டில் இருந்த 60 பவுன் நகைகள் மற்றும் ரூ.4 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






