என் மலர்
உள்ளூர் செய்திகள்

பென்னாத்தூரில் சீறிப்பாய்து ஓடிய காளை.
காளை விடும் விழாவில் மாடு முட்டி 5 பேர் காயம்
- 300-க்கும் மேற்ப்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டன
- போலீஸ் சூப்பிரண்டு திடீரென ஆய்வு செய்தார்
அணைக்கட்டு:
வேலூர் அடுத்த பென்னாத்தூர் பகுதியில் எருது விடும் விழா ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடைப்பெறுவது வழக்கம் .
இதனை தொடர்ந்து இந்த ஆண்டில் கடந்த மாதம் விழா நடைபெற இருந்தது. அப்போது சில காரணங்களால் விழா தள்ளி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று விழா நடைப்பெற்றது.
விழாவில் பங்கேற்பதற்காக வேலூர் மாவட்டம் மட்டுமின்றி திருப்பத்தூர் ராணிப்பேட்டை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும் சுமார் 300-க்கும் மேற்ப்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டன.
பின்னர் ஓடு பாதையில் காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது. அப்போது காளைகள் ஓடு பாதையில் சிறிப்பாய்ந்து ஓடியது. வெற்றிப்பெற்ற காளைகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.
விழாவினை வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் திடீரென ஆய்வு செய்தார்.
ஓடு பாதையில் உள்ளே காளைகளை ஆரவாரம் செய்ய இளைஞர்கள் யாரையும் அனுமதிக்க கூடாது என போலீசாருக்கு எஸ் பி அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது வேலூர் தாசில்தார் மற்றும் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் உடன் இருந்தனர்.






