என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொள்ளை நடந்த கடை, வீட்டில் போலீசார், கைரேகை பிரிவினர் விசாரணை நடத்திய போது எடுத்த படம்.
ஒடுகத்தூர் அருகே அடுத்தடுத்து 2 வீடு, கடையில் கொள்ளை
- 35 பவுன் நகை, பணத்தை அள்ளி சென்றனர்
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அண்ணா நகரை சேர்ந்தவர் பாபு. இவர் ஒடுகத்தூரில் கரிகடை வைத்து நடத்தி வருகின்றார்.
இவருக்கு சொந்தமாக ஒரே பகுதியில் 2 வீடுகள் உள்ளது. நேற்று இவரின் பேத்திக்கு பிறந்தநாள் விழா கொண்டாடி விட்டு அருகே இருந்த மற்றொரு வீட்டில் தூங்கினார்.
இந்த நிலையில் அதிகாலை 3.30 மணியளவில் பாபு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற திருட்டு கும்பல் அங்கு இருந்த 30 சவரன் தங்க நகை மற்றும் ரூ. 2 லட்சம் ரொக்க பணத்தை யும் கொள்ளையடித்து விட்டு அருகே இருந்த நவின் (வயது 27) என்பவரின் மற்றொரு வீட்டின் பூட்டை உடைத்து அங்கு இருந்த 5 சவரன் தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர்.
மேலும் செல்லும் வழியில் குருவராஜா பாளையம் பகுதியில் செல்போன் கடையில் பூட்டை உடைத்து அங்கு இருந்த ரூ. 3 ஆயிரம் பணம் மற்றும் லேப்டாப், செல்போன்களை திருடிச் சென்றுள்ளனர்.
காலையில் வீட்டின் உரிமையாளர்கள் வீட்டின் பூட்டு உடைத்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்திற்க்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் தடவியல் வல்லுனர்கள் கைரேகையை சேகரித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் கொள்ளைச்சம்பவம், வழிப்பறி போன்றவைகள் அதிகரித்து வரும் நிலையில் இதனை தடுக்க புதிய யுக்தியை போலீசார் கையான வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.






