என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் வெங்கடேஸ்வரா பள்ளியில் நடந்த தேர்வு மையத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி.
1,729 பேர் என்ஜினீயரிங் பணிக்கான தேர்வு எழுதினர்
- 3,120 பேர் விண்ணப்பித்திருந்தனர்
- வெளி ஆட்கள் நுழைவதை தடுக்க போலீஸ் பாதுகாப்பு
வேலூர்:
தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் அடங்கிய பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு நடந்தது. இந்த தேர்வை எழுதுவதற்காக வேலூர் மாவட்டத்தில் 3,120 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இதற்காக வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, ஈ.வெ.ரா. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கொணவட்டம் அரசுப்பள்ளி, தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி, வேலூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரி, ஊரீசு பள்ளி, அலமேலுமங்காபுரம் சினேகதீபம் பள்ளி உள்பட 11 மையங்களில் தேர்வு நடந்தது.
காலை மற்றும் மாலை வேளையில் நடைபெறும் இந்த தேர்வில் செல்போன், கால்குலேட்டர், பென் டிரைவ் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இன்று காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. 1729 பேர் தேர்வு எழுதினர்.1374 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு அறைக்குள் செல்லும் மாணவர்கள் அனைவரும் பலத்த பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
தேர்வு மையங்களில் மின்தடை ஏற்படாதவாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. தேர்வு மையங்களில் வெளி ஆட்கள் நுழைவதை தடுக்கும் பொருட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.






