என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொழிலாளி கொலையில் மருமகன் கைது
- சொத்து தகராறில் அவரது மருமகன் இரவு நேரத்தில் செல்வத்தை அடித்து கொலை செய்தது தெரியவந்தது
- எதுவும் தெரியாதது போல் நாடகமாடியுள்ளார்
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 62). தேங்காய் உரிக்கும் கூலி தொழிலாளி.
இவரது மனைவி ஹேமாவதி. இவர்களுக்கு ஜெயலட்சுமி என்ற மகளும் ஒரு மகனும் உள்ளனர்.இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
நேற்று காலை செல்வம் அடித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
காட்பாடி டி.எஸ்.பி பழனி, லத்தேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.
செல்வம் தலையில் பலத்த காயங்கள் இருந்தது.
பின்னர் செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக அவரது மருமகனிடம் விசாரணை நடத்தினர்.
இதில் சொத்து தகராறில் அவரது மருமகன் பிரபாகரன் (27) இரவு நேரத்தில் செல்வத்தை அடித்து கொலை செய்தது தெரியவந்தது.
மேலும் அவர் எதுவும் தெரியாதது போல் நாடகமாடியுள்ளார். போலீசார் பிரபாகரனை கைது செய்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






