search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா ஆலய திருவிழா -திண்டுக்கல்லில் இருந்து 60 சிறப்பு பஸ்கள் இயக்கம்
    X

    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆலயத்துக்கு திண்டுக்கல்லில் இருந்து பாதயாத்திரையாக சென்றவர்கள்.

    வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா ஆலய திருவிழா -திண்டுக்கல்லில் இருந்து 60 சிறப்பு பஸ்கள் இயக்கம்

    • திண்டுக்கல் மறை மாவட்டம் சின்ன பொன்னி மாந்துரை புதுப்பட்டியில் இருந்து பாதயாத்திரையாக பக்தர்கள் இன்று சென்றனர்.
    • நாளை முதல் செப்டம்பர் 9ஆம் தேதி வரை 60 சிறப்பு பஸ்கள் இரவு பகலாக இயக்கப்படுகிறது.

    திண்டுக்கல்:

    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழா வருடந்தோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை மறுநாள் (29ம் தேதி) ெகாடியேற்றத்துடன் தொடங்குகிறது. செப்டம்பர் 9ஆம் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது.

    இந்த திருவிழாவிற்கு தமிழகம் மற்றும் வெளி மாநில ங்களில் இருந்து ஏரா ளமா னோர் பாதயாத்திரையாக சென்று வழிபாடு நடத்துவது வழக்கம்.

    தி ண் டு க் க ல் மறை மாவட்டம் சின்ன பொன்னி மாந்துரை புதுப்பட்டியில் இருந்து பாதயாத்திரையாக பக்தர்கள் இன்று சென்றனர். அல ங்கரிக்கப்பட்ட தேரி ல்மாதா சொரூபம் மல ர்களால் அலங்கரி க்கப்பட்டு பக்தர்கள் இழுத்து சென்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 50க்கும் மேற்பட்டோர் பாதையாத்திரை சென்றனர்.

    புனித வேளாங்கண்ணி மாதாவை தரிசிக்க செல்லும் பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் மதுரை கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கலில் இருந்து வேளாங்கண்ணிக்கும், வேளாங்கண்ணியில் இருந்து திண்டுக்கலுக்கும் பக்தர்களி ன் தேவைக்கேற்ப, நாளை முதல் செப்டம்பர் 9ஆம் தேதி வரை 60 சிறப்பு பஸ்கள் இரவு பகலாக இயக்க ப்படுகிறது.

    இதனை கண்கா ணிக்க திண்டு க்கல்லிலும் வேளா ங்கண்ணியிலும் மேலாளரின் தலைமையில் 2 தனி குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×