search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓட்டப்பிடாரம் அருகே வரும்முன் காப்போம்  சிறப்பு மருத்துவ முகாம்- சண்முகையா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    X

    சிறப்பு மருத்துவ முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை சண்முகையா எம்.எல்.ஏ. வழங்கிய போது எடுத்த படம்.

    ஓட்டப்பிடாரம் அருகே வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்- சண்முகையா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    • சிறப்பு மருத்துவ முகாமிற்கு யூனியன் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார்.
    • மருத்துவ முகாமை சண்முகையா எம்.எல்.ஏ. குத்து விளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தார்.

    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஓசநூத்து கிராமத்தில் தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கலைஞரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி யில் நடந்தது.

    யூனியன் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவ லர் டாக்டர் தங்கமணி முன்னிலை வகித்தார். எஸ்.கைலாசபுரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் ஜீவராஜ் பாண்டியன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சண்மு கையா எம்.எல்.ஏ. குத்து விளக்கேற்றி வைத்து மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு ஆரோக் கியத்தை பேணும் வகையில் ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் பயனாளிகளுக்கு மருத்துவ காப்பிட்டு அட்டைகளை சண்முகையா எம்.எல்.ஏ வழங்கினார்.

    மேலும் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் தயார் செய்யப்பட்டிருந்த பாரம்பரிய உணவு முறை களை பார்வையிட்டனர். மருத்துவ முகாமில் நூற் றுக்கணக்கான பொது மக்கள் சிகிச்சை பெற்று சென்றனர்.

    நிகழ்ச்சியில் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திலகவதி, மாவட்ட தலைமை அலுவலர் ஐஷ்வர்யா, குலசேகரநல் லூர் பஞ்சாயத்து தலைவர் வேலாயுதசாமி, யூனியன் கவுன்சிலர் மொட்டையச் சாமி, மருத்துவ அலுவலர்கள் ஜெய பிரபா, இலக்கியா, ஜீவிதா, சுப்ரமணியன், சித்த மருத்துவர் மல்லிகா, கண் மருத்துவர் வேல்குமார்,

    வட்டார மருத்துவ மேற் பார்வையாளர் முருக ராஜ், வட்டார சுகாதார மேற் பார்வையாளர் ஆறுமுகம், சுகாதார ஆய்வாளர்கள் காளி முத்து, பாபு, தினேஷ், மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள், அங்கன்வாடி கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×