search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும் - ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கோரிக்கை
    X

    வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும் - ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கோரிக்கை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி தூத்துக்குடிக்கு அடுத்த படியாக இரண்டாவது பெரிய தொழில் நகரமாகும்.
    • ஆனால் இந்த ரெயில் கோவில்பட்டியில் நின்று செல்லாது என்பது இப்பகுதி மக்களிடம் மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் நெல்லையில் இருந்து சென்னைக்கு புதிதாக விடப்பட்டுள்ள வந்தே பாரத் ெரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. ெரயில்வே அமைச்சர் மற்றும் தென்னக ெரயில்வே பொது மேலாளர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

    அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி தூத்துக்குடிக்கு அடுத்த படியாக இரண்டாவது பெரிய தொழில் நகரமாகும். இங்கிருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பஸ் மற்றும் ெரயில் மூலம் சென்னை சென்று வருகின்றனர்.

    தற்போது நெல்லையில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ெரயில் இன்று முதல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வழியாக இயக்கப்படுகிறது.

    ஆனால் இந்த ெரயில் கோவில்பட்டியில் நின்று செல்லாது என்பது இப்பகுதி மக்களிடம் மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே கோவில்பட்டி, தூத்துக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார ஊர்களில் உள்ள வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் சென்னையில் கல்வி பயின்று வரும் மாணவ மாணவிகள் பயன்பெறும் வண்ணம் வந்தே பாரத் ெரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

    Next Story
    ×