search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குளம் அருகே திருச்சபையில் விடுமுறை வேதாகம பள்ளி வகுப்புகள்
    X

    ஆலங்குளம் அருகே திருச்சபையில் விடுமுறை வேதாகம பள்ளி வகுப்புகள்

    • கடைசி நாளில் தேர்வு மற்றும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
    • மாலையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    ஆலங்குளம்:

    நெல்லை திருமண்டலம் நல்லூர் சேகரம் கரும்புளியூத்து திருச்சபையில் 2023 ஆண்டின் விடுமுறை வேதாகம பள்ளி நடைபெற்றது. விடுமுறை காலங்களில் 15 நாட்கள் வகுப்புகள் நடைபெற்றன. இந்த வருடத்தின் தலைப்பு "காலம் இதுவே" இதன் அடிப்படையில் 15 நாட்களும், வசனம், வேதாகம கதைகள், உண்மை சம்பவம், பாடல்கள், நடனம் கற்று கொடுக்கப்பட்டன.

    மேலும் விதவிதமான குளிர்பானங்கள், உணவு கொடுக்கப்பட்டது. இதை முன்னின்று வக்கீல்கள் ரமேஷ், சதீஷ்குமார் மற்றும் பிரபா, ஷர்மிளா, பால்டுவின் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 8-வது நாள் தியான சுற்றுலாவாக தோட்டத்துக்கு அழைத்து செல்லப்பட்டு உணவு மற்றும் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு மகிழ்ச்சியாக விளையாடினர்.

    10-வது நாள் இன்ப சுற்றுப்பயணமாக அழைத்து செல்லப்பட்டது. கடைசி நாளில் தேர்வு மற்றும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மாலையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் சேகர தலைவர் பிரே ஜேம்ஸ் மற்றும் கரும்புளியூத்து திருமண்டல சபை ஊழியர் ஜாண் பிரேம் தாஸ் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். கரும்புளியூத்து சபைமக்கள், தொழிலதிபர்கள் திருவெங்கடேஷ் ஜாஸ்வா மற்றும் செல்வராணி உரிமையாளர் பிரின்ஸ் தங்கம் நன்கொடை வழங்கினார்கள்.

    Next Story
    ×