என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவிகளுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்த காடசி.
மாநில அளவிலான போட்டியில் ஊத்தங்கரை அதியமான் கல்லூரி மாணவிகளின் படைப்பு தேர்வு
- பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கிடையே புத்தாகப் போட்டி நடைபெற்றது.
- 7867 மாணவ, மாணவிகள் தங்களது புத்தாக்க படைப்புகளை வெளியிட்டனர்.
மத்தூர்,
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு , புத்தாக்க நிறுவனம் மற்றும் பெரியார் பல்கலைக்கழக நிறுவனத்தின் சார்பாக உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர் மாணவிகளுக்கிடையே புத்தாக்க திறமைகளை ஊக்கப்படுத்தவும், வெளிப்படுத்தும் விதமாகவும் மாநில அளவிலான தமிழ்நாடு அளவில் உள்ள பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கிடையே புத்தாகப் போட்டி நடைபெற்றது.
இதில் தமிழ்நாட்டில் 5 மண்டலங்களைச் சேர்ந்த 927 உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து 7867 மாணவ, மாணவிகள் தங்களது புத்தாக்க படைப்புகளை வெளியிட்டனர்.
இதில் கோயம்புத்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அளவில் 56 குழுக்களில் 129 மாணவிகளில் ஒருவராக பங்கேற்றனர். இதில் அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகளின் படைப்பு சிறந்த புத்தாக்க படைப்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த படைப்பிற்கு பல்வேறு தரப்பினர்களிடமிருந்து வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது.
இதன் மூலம் கிராமப்புற மாணவ மாணவியர்களுக்கிடையே பெரும் உற்சாகத்தையும், ஆர்வத்தையும் தூண்டும் விதமாக அமைந்துள்ளது.
இதற்கு வழிகாட்டியாக அதியமான் கல்லூரியின் தொழில் முனைவர் மேம்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் அன்புச்செல்வி, கவிதா பெரியார் பல்கலைக்கழக தொழில் முனைவோர் மைய ஒருங்கிணைப்பாளர் பழனிவேலு, தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனர் கள ஒருங்கிணைப்பாளர் அப்துல் காதர், கவிச்செல்வன், டேனியல் பிரகாரன், ஜெயசங்கர், அகமதாபாத்தைச் சேர்ந்த தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனர் மற்றும் திட்ட அலுவலர் வீரமணி, அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் கல்லூரியின் முதல்வர் முனைவர் சீனி. திருமால் முருகன் அவர்கள் அதியமான் கல்வி நிறுவனங்களின் செயலர் முனைவர் ஷோபா மாணவிகளை பாராட்டினர். பிற துறைத் தலைவர்கள் அனைத்து துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் அனைவரும் மாணவிகளை பாராட்டினர்.






