என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
வைகையாற்றில் அடையாளம் தெரியாத பெண் பிணம்
- கருப்பசாமி கோவில் அருகே உள்ள வைகை ஆற்றங்கரை பகுதியில் அடையாளம் தெரியாத பெண் சடலம் கிடந்தது
- இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
ஆண்டிபட்டி:
போடி தாலுகா போலீஸ் தேனி மாவட்டம் குன்னூர் கருப்பசாமி கோவில் அருகே உள்ள வைகை ஆற்றங்கரை பகுதியில் அடையாளம் தெரியாத பெண் சடலம் கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் விஜயமுருகன் க.விலக்கு போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அதில் 45 முதல் 55 வயது மதிக்கத்தக்க பெண் இறந்து கிடந்தது தெரிய வந்தது. அவர் யார்? எந்த ஊர்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story






