என் மலர்
உள்ளூர் செய்திகள்

சனாதன பக்தர்களின் உண்டியல் காசு மட்டும் வேணுமா? - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
- சென்னையில் நடந்த விழாவில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார்.
- மதத்தை ஒழிப்பேன் என்று சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை என்றார்.
சென்னை:
சென்னை எம்.ஆர்.சி. நகரில் நடைபெற்ற கணக்கு தணிக்கையாளர்கள் அமைப்பின் 90-வது ஆண்டு விழாவில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தணிக்கை துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பங்கு முக்கியமானது. தணிக்கையாளர்கள் தங்கள் பணியை திறம்பட செய்ய வேண்டும்.
அனைத்து மாநிலங்களுக்கும் தேவையானவற்றை வழங்கி வருகிறோம்.
அரசியல் சாசனப்படி உறுதிமொழி எடுத்துக் கொண்டு அமைச்சராக பொறுப்பு ஏற்கிறோம். அப்படி இருக்கும்போது, என்னதான் நமது கொள்கை என்றாலும், ஏதோ ஒரு மதத்தை ஒழிப்பேன் என்று சொல்வதற்கான அதிகாரம் யாருக்கும் இல்லை. முக்கியமாக அமைச்சருக்கு அது இல்லவே இல்லை.
ஒரு பொது மேடையில் இருந்து கொண்டு ஒழிக்கப்போகிறேன் என்று சொன்னால், அது ரொம்ப தப்பு. அப்படி ஒழிப்பேன் என்று சொல்லவில்லை என்று இப்போது சொல்வது பொருந்தாது.
சனாதனத்தை எதிர்க்கும் மாநாடு இது இல்லை, ஒழிக்கின்ற மாநாடு என்று கூறினார். அமைச்சராக இருப்பவர் பொறுப்பாக பேசவேண்டும். அதே மேடையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவும் இருந்திருக்கிறார்.
தேர்தலுக்காக சனாதன எதிர்ப்பு கருத்துகளை எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
கோயிலின் உண்டியல் பணம் மட்டும் தமிழக அரசின் அறநிலையத்துறைக்கு வேண்டுமா என கேள்வி எழுப்பினார்.