என் மலர்
உள்ளூர் செய்திகள்

தென்காசி மாவட்டத்தில் அண்ணாமலை பாத யாத்திரை பொதுக்கூட்டத்தில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்பு- ஆலோசனை கூட்டத்தில் தகவல்
- பாதயாத்திரை நிகழ்ச்சியை வருகிற 3-ந்தேதி காலை பொட்டல்புதூரில் தொடங்கி கடையத்தில் முடிப்பது என முடிவு செய்யப்பட்டது.
- பொதுக்கூட்டத்தில் திரளான தொண்டர்களை கலந்த கொள்ள செய்வது என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்ட பாரதீய ஜனதா கட்சி ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைமை அலுவல கத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செய லாளர் பாலகுருநாதன் ராமநாதன், பொருளாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்செயலாளரும், கன்னியாகுமரி பெரு ங்கோட்ட பொறுப்பாள ருமான பொன் பால கணபதி, மாநில தொழில் பிரிவு செயலாளர் மகா தேவன், தென்காசி மாவட்ட பார்வை யாளர் மகாராஜன், மாநில செயற்குழு உறுப்பி னர் பாண்டித்துரை ஆகி யோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணா மலை தென்காசி மாவட்ட த்தில் பங்கேற்க இருக்கும் என் மண் என் மக்கள் யாத்திரையின் முடிவில் சங்கரன்கோவிலில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் சம்பந்த மாக மாவட்ட நிர்வாகிகள், மண்டல் தலைவர்கள், பிற அணி, பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதில், வருகிற 3-ந்தேதி காலை பாதயாத்திரை நிகழ்ச்சியை ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொட்டல்புதூரில் தொடங்கி கடையத்தில் முடிப்பது என்றும், அன்று மாலை தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழப்புலியூரில் தொடங்கி தென்காசி புதிய பஸ் நிலையத்தில் நிறைவு செய்யவும், 4-ந் தேதி காலை மேலகடையநல்லூர் கடகலீஸ்வரர் கோவிலில் தொடங்கி கிருஷ்ணா புரத்தில் யாத்திரையை முடிப்பது என்றும் அன்று மாலையில் புளியங்குடி மின்சார அலுவலகம் முன்பு மாலை 4 மணிக்கு தொடங்கி டி.என். புதுக்குடி யில் முடிப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.மேலும் 6-ந் தேதி மாலை 4 மணிக்கு சங்கரன் கோவில் சட்டமன்ற தொகுதி என்.ஜி.ஓ. காலனி யில் தொடங்கி சங்கரன் கோவில் வடக்கு ரத வீதியில் யாத்திரையை முடிப்பது என்றும் பின்னர் மாலை 6 மணிக்கு பொதுக் கூட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இந்த நடை பயணத்திலும், பொதுக்கூட்டத்திலும் தென்காசி மாவட்டத்தில் இருந்து திரளான தொண்டர்களையும், பொது மக்களையும் கலந்த கொள்ள செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர்கள் ராதா கிருஷ்ணன், முத்துக்குமார், பாலமுருகன், முத்துலட்சுமி, மாவட்டச் செயலாளர்கள் ராஜலட்சுமி சுப்ரமணியன், அர்ஜூனன் மற்றும் மண்டல் தலைவர்கள், மண்டல் பார்வையாளர்கள், பிற அணி, பிரிவு நிர்வாகி கள் கலந்து கொண்டனர். முடிவில் தென்காசி நகர தலைவர் மந்திரமூர்த்தி நன்றி கூறினார்.






