search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனுமதியின்றி டன் கணக்கில்  மண் கடத்தல்
    X

    அனுமதியின்றி டன் கணக்கில் மண் கடத்தல்

    • எடுக்கப்ப ட்ட மண்ணுக்கு ஊராட்சி கணக்கு எண் ஒன்றிற்கு ரூ.3 லட்சம் செலுத்துமாறு ஒப்பந்ததாரருக்கு அதிகாரி உத்தரவு.
    • தொடர் மண் திருட்டை அதிகாரிகள் தடுக்க வேண்டும்

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒசஅள்ளி ஊராட்சியில் ஏழு சிறிய கிராமங்களை உள்ளது. ஊராட்சியில் பெருமாள் கோவில் முதல் பாசாரப்பட்டி வரையில் 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு தார் சாலை அமைக்கும் பணிக்கு கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்து தற்பொழுது பணி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் சாலை அமைக்கும் ஒப்பந்ததாரர் ஊராட்சியின் அனுமதியின்றி பல லட்சம் டன் செம்மண் சாலை பணிக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

    இதை தடுப்பதற்காக ஊராட்சி மன்றத் தலைவர் ஆறுமுகம் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்ட செம்மண் கடத்தல் செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர். மாவட்ட துணை கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அந்த தகவலின் பேரில் விசாரணை செய்யப்பட்டு எடுக்கப்ப ட்ட மண்ணுக்கு ஊராட்சி கணக்கு எண் ஒன்றிற்கு ரூ.3 லட்சம் செலுத்துமாறு ஒப்பந்ததாரருக்கு மாவட்ட கூடுதல் கலெக்டர் தீபனா விக்னேஸ்வரி அறிவுறுத்தி சென்றதாக கூறப்படுகிறது. பின்பு எதையும் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து மண் திருட்டு நடத்தி வருகிறார்.

    இந்த தொடர் மண் திருட்டை அதிகாரிகள் தடுக்க வேண்டும் என்பது ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    தொடரும் மண் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மேற்கொண்டு மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர்.

    Next Story
    ×