search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை நேதாஜி மைதானத்தில் கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு - விளையாட்டு வீரர்கள்  எதிர்பார்ப்பு
    X

    காேப்புபடம்

    உடுமலை நேதாஜி மைதானத்தில் கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு - விளையாட்டு வீரர்கள் எதிர்பார்ப்பு

    • போதிய கட்டமைப்பு வசதிகள் பல ஆண்டுகளாக மேம்படுத்தப்படாமல் உள்ளது.
    • இளைஞர்கள் பல்வேறு விளையாட்டுகளில் மாநில அணியில் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    உடுமலை :

    உடுமலை நகரின் மையப்பகுதியில் 6.30 ஏக்கர் பரப்பில் நேதாஜி மைதானம் அமைந்துள்ளது. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்குரிய இம்மைதானம், சுற்றுப்பகுதி விளையாட்டு வீரர்களின் முக்கிய பயிற்சி மைதானமாக உள்ளது.

    ஆனால் போதிய கட்டமைப்பு வசதிகள் பல ஆண்டுகளாக மேம்படுத்தப்படாமல் உள்ளது. கடந்த2014-15ல், ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் ஸ்கேட்டிங் மைதானம் மட்டும் ஏற்படுத்தப்பட்டது. பிற விளையாட்டுகளுக்கான வசதிகள் எதுவும் இல்லை. தற்போது இப்பகுதியில் ஆக்கி, தடகளம், வாலிபால் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு பயிற்சி பெற உடுமலை பகுதி இளைஞர்கள் ஆர்வம் காட்டினாலும், மைதானத்தில் போதிய வசதிகளில்லை.

    எனவே மின்னொளியுடன் கூடிய வாலிபால் மைதானம், தடகளத்துக்கான ஓடுதளம் மற்றும் கால்பந்து மைதானம் பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கம் மற்றும் உடற்பயிற்சிக்கூடம் ஆகிய வசதிகள் தேவை என இப்பகுதி விளையாட்டு வீரர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.

    ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உடுமலை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பல்வேறு விளையாட்டுகளில் மாநில அணியில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். மேலும், நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பயிற்சி பெற்றுவிளையாட்டில் சாதிக்க காத்திருக்கின்றனர்.எனவே தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நேதாஜி மைதானத்தில் ஆய்வு செய்து கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×