என் மலர்
உள்ளூர் செய்திகள்

இளைஞர் ஒருவருக்கு தலைக்கவசம் அணிவித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன்
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள்: 250 இளைஞர்களுக்கு ஹெல்மெட் வழங்கினார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்
- நகர இளைஞர் அணி அமைப்பாளர் எம்.வி.மோகன்குமார் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது
- காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக பொருளாளர், நகர கழக செயலாளர் வெ.விசுவநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் நகர தி.மு.க இளைஞர் அணி சார்பில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 45வது பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நகர இளைஞர் அணி அமைப்பாளர் எம்.வி.மோகன்குமார் தலைமையில், மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகம் எதிரில் நடைபெற்றது.
இதில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு 250 இளைஞர்களுக்கு உயிர் காக்கும் தலைகவசம் (ஹெல்மெட்), பெண்களுக்கு தையல் மிஷின், கிறிஸ்தவர்களுக்கு உணவுப் பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக பொருளாளர், நகர கழக செயலாளர் வெ.விசுவநாதன், காஞ்சிபுரம் எம்.பி க.செல்வம், பையணூர் சேகர், ரமேஷ், பூபதி, கார்த்திக், பிரபு, சிகாமணி, உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பணிகளை மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் கண்காணித்தார்.






