என் மலர்
உள்ளூர் செய்திகள்

நலத்திட்ட உதவிகளை மதியழகன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா: கிருஷ்ணகிரியில் நலத்திட்ட உதவிகள் -மதியழகன் எம்.எல்.ஏ. வழங்கினார்
- உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., பிறந்த நாள் விழா நடந்தது.
- 500 மகளிருக்கு இலவசமாக சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., பிறந்த நாள் விழா நடந்தது. இந்த விழாவிற்கு நகர செயலாளர் நவாப் தலைமை தாங்கினார்.
நகராட்சி தலைவர் பரிதாநவாப், துணைத் தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் துரைசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகி ஆர்.எஸ்.கிரி வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., பங்கேற்று, 500 மகளிருக்கு இலவசமாக சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், மாவட்ட துணை செயலாளர் கோவிந்தசாமி, மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தில், கிருபாகரன், பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம், பாலன், நாகராசன், ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், கவுன்சிலர்கள் செந்தில்குமார், வேலுமணி, பாலாஜி, மதன்ராஜ், தேன்மொழி மாதேஷ், சீனிவாசன், சக்திவேல் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






