என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆட்டோ டிரைவர்களிடம் நூதன முறையில் செல்போன் திருடிய 2 பேர் கைது
- கடந்த ஒரு வருடமாக ஆட்டோவில் ஏறி அவசரமாக போன் செய்ய வேண்டும் என்று கூறி ஆட்டோ ஓட்டுநர்களை ஏமாற்றி செல்போன் திருடியுள்ளனர்.
- திருடிய செல்போன்களை தங்களது நண்பர்கள் தெரிந்தவர்களிடம் விற்று பணத்தை ஜாலியாக செலவு செய்துள்ளனர்.
ராயபுரம்:
ஆட்டோ ஓட்டுநர்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து செல்போன் திருடி வந்த ஆவடி காமராஜர் நகரை சேர்ந்த சபீர் (28) அவரது நண்பர் உஸ்மான் அலி (23) ஆகியோரை வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் இருவரும் சேர்ந்து சிந்தாதிரிப்பேட்டை, செம்பியம், புரசைவாக்கம், பெரியமேடு, திருவல்லிக்கேணி என சென்னை நகரின் பலபகுதிகளில் கடந்த ஒரு வருடமாக ஆட்டோவில் ஏறி அவசரமாக போன் செய்ய வேண்டும் என்று கூறி ஆட்டோ ஓட்டுநர்களை ஏமாற்றி செல்போன் திருடியுள்ளனர். கடந்த ஒரு வருடமாக போலீசிடம் சிக்காமல் தப்பி வந்த இவர்களை வடக்கு கடற்கரை போலீசார் தற்போது கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.
திருடிய செல்போன்களை தங்களது நண்பர்கள் தெரிந்தவர்களிடம் விற்று அந்த பணத்தை ஜாலியாக செலவு செய்துள்ளனர் என போலீசார் விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்களில் சபீர் மீது ஆவடியில் ஒரு செல்போன் திருட்டு வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.






