என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    செங்குன்றத்தில் லாரியில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
    X

    செங்குன்றத்தில் லாரியில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • லாரியை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினார்கள்.
    • ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தன.

    அம்பத்தூர்:

    செங்குன்றம் ஜி.என்.டி. சாலையில் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முகேஷ் ராவ் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினார்கள். அதில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தன. இதையடுத்து டிரைவர், கிளீனர் மற்றும் லாரியை சென்னை பட்டரை வாக்கத்தில் உள்ள குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

    அவர்களிடம் விசாரணை நடத்திய போது வியாசர்பாடியை சேர்ந்த பாண்டியன், கிருஷ்ணமூர்த்தி என்று தெரியவந்தது. ரேஷன் அரிசியை ஆந்திராவுக்கு கடத்தி செல்வதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். லாரியில் இருந்த 12 ஆயிரம் கிலோ எடை கொண்ட 240 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×