என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கஞ்சா பதுக்கி விற்ற இருவர் கைது
    X

    கஞ்சா பதுக்கி விற்ற இருவர் கைது

    • இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையிலான காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • கஞ்சாவை பறிமுதல் செய்த காவல் துறையினர் பிரியாவை கைது செய்தனர்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வது குறித்து அரூர் டி.எஸ்.பி. புகழேந்தி கணேசுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையிலான காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அரூர் அரசு மருத்துவமனை எதிரே உள்ள துணிக்கடையில் கஞ்சா விற்பனை செய்வது தெரிய வந்தது. காவல்துறையினரை கண்டதும் அரூர் ஆத்தோர வீதியை சேர்ந்த பூஞ்மாலை செட்டியார் மகன் சிவகுமார் (வயது 41) என்பவர் அங்கிருந்து தப்பி ஓடமுயற்சி செய்தார்.

    அவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் ஒரு கிலோ 100 கிராம் உள்ள கஞ்சா பொட்டலங்களை தனித்தனியாக பிரித்து விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து சிவக்குமாரிடமிருந்து ஒரு கிலோ 200 கிராம் உள்ள கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அரூரில் குடியிருக்கும் பாளையம் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் மனைவி பிரியா (39) என்பவரிடம் கஞ்சா விற்பனையில் உதவியாளராக வேலை செய்ததாகவும் கூறியுள்ளார்.

    இதையடுத்து பிரியா வீட்டில் சோதனை செய்து போது ஒரு கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்ததை அடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த காவல் துறையினர் பிரியாவை கைது செய்தனர்.

    கஞ்சா விற்பனையில் தொடர்ந்து பிரியா ஈடுபட்டு வருவதும், இவர் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வரவழைத்து பல்வேறு பகுதிகளில் விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இரண்டு பேரையும் வழக்கு பதிந்து சிறையில் அடைத்த போலீசார் இருவரிடமிருந்து ரூ.50,000 மதிப்பிலான சுமார் இரண்டரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×