என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின்சாரம் தாக்கி பலியான வினோத்.
வாட்டர் ஹீட்டரை ஆன் செய்யும்போது மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
திருப்பூர்,
திருப்பூர் எம்.எஸ். நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத் (29). அதே பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே நேற்று இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்த வினோத் வீட்டின் குளியலறையில் உள்ள வாட்டர் ஹீட்டரை ஆன் செய்ய முற்பட்டார். அப்போது திடீரென அவரை மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது.
மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருப்பூர் மத்திய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story