என் மலர்
உள்ளூர் செய்திகள்

பணியில் இருந்த போது மாரடைப்பில் லாரி டிரைவர்-காவலாளி சாவு
- கோழிப்பண்ணையில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.
- திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள நடுப்பட்டியை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 55). இவர் ஓசூர் திருச்சிப்பள்ளியில உள்ள ஒரு கோழிப்பண்ணையில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி காலை வேலையில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதே போல திருச்சி மாவட்டம் பார்வதிபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (46). லாரி டிரைவர். இவர் லாரியை ஓட்டிக் கொண்டு கந்திகுப்பம் அருகே உள்ள பி.ஆர்.ஜி.மாதேப்பள்ளி பக்கமாக வந்தார். அங்கு சாலையோரம் லாரியை நிறுத்தி விட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்படவே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டார். இது குறித்து கந்திகுப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






