என் மலர்
உள்ளூர் செய்திகள்

விக்கல் நோயால் விவசாயி தற்கொலை
துறையூர் அருகே விக்கல் நோயால் விவசாயி தற்கொலை
துறையூர்,
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள அம்மம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் குஞ்சு (வயது 65), விவசாயி. இவருக்கு தீராத வயிற்று வலி மற்றும் விக்கல் நோய் இருந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக குஞ்சு பல்வேறு மருத்துவமனைகளில் மருத்துவம் பார்த்தும் நோய் குணமாகவில்லை. சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், குஞ்சு பூச்சிக்கொல்லி மருந்தை தின்றுவிட்டார்.
அவரது உறவினர்கள் குஞ்சுவை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சையில் இருந்த குஞ்சு நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து துறையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






