search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயான கிணற்றில் தவறி விழுந்து வெட்டியான் தொழிலாளி பலி
    X

    மயான கிணற்றில் தவறி விழுந்து வெட்டியான் தொழிலாளி பலி

    • திருச்சி அருகே மயான கிணற்றில் தவறி விழுந்து வெட்டியான் வேலை பார்த்த தொழிலாளி பலியானார்
    • அதிக போதையில் இருந்த அவர், நான் சிறிது நேரம் கழித்து வந்துவிடுவேன் என்று கூறி அனுப்பிவிட்டார். ஆனால் இரவு 7 மணியாகியும் மணியன் வீடு திரும்பவில்லை

    திருச்சி:

    திருச்சியை அடுத்த போதாவூர் ஆதிதிராவிடர் காலனி கீழமேடு பகுதியை சேர்ந்தவர் மணியன் (வயது 50). கூலி வேலைக்கு செல்லும், போதாவூர் மயானத்தில் வெட்டியானாகவும், துக்க நிகழ்ச்சிகளில் மேளம் அடிக்கும் தொழிலும் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி கமலா என்ற மனைவி உள்ளார். குழந்தைகள் இல்லை.

    இந்த நிைலயில் நேற்று முன்தினம் போதாவூர் ஜே.ஜே.காலனியை சேர்ந்த கண்ணியம்மாள் என்பவர் இறந்துவிட்டார். இதையடுத்து மயானத்திற்கு செல்வதாக கூறிச்சென்றனர், அங்கு பணிகளை முடித்துவிட்டு அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளார்.

    நடக்க கூட முடியாத நிலையில் போதையில் திளைத்த அவரை, உறவினரான சுந்தரம் என்பவர் வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். அதற்கு மறுத்த அவர், நான் சிறிது நேரம் கழித்து வந்துவிடுவேன் என்று கூறி அனுப்பிவிட்டார். ஆனால் இரவு 7 மணியாகியும் மணியன் வீடு திரும்பவில்லை.

    இதையடுத்து காலையில் தேடிப்பார்த்தபோது, மயானத்தில் அருகிலுள்ள கைப்பிடி இல்லாத கிணற்றின் கரையில் மணியனின் செருப்பு கிடந்துள்ளது.

    இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதியினர் கிணற்றுக்குள் இறங்கி தேடினர். அப்போது 40 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த மணியன் உடல் இறந்த நிலையில் மீட்கப்பட்டது.

    மது போதையில் இருந்த அவர் கிணற்றுக்குள் தவறி விழுந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக சோமரசம்பேட்டை போலீசில் அவரது மனைவி கமலா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×