search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி காய்கறி விலையில் மாற்றம்
    X

    திருச்சி காய்கறி விலையில் மாற்றம்

    • இஞ்சி கிலோ ரூ.175 ஆக உயர்ந்தது
    • பருவம் தவறிய மழையால் திருச்சி காந்தி மார்க்கெட்டில் விலை நிர்ணயம் நிலையற்ற தன்மையில் இருந்தது

    திருச்சி,

    தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்னரே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. குறிப்பாக ஈரோடு, கரூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தினமும் 100 டிகிரி செல்சியசை தாண்டி வெப்பத்தின் தாக்கம் உயர்ந்தது. இதற்கிடையே கீழடுக்கு சுழற்சி காரணமாக அவ்வப்போது கோடை மழை பெய்து வந்தது. இதனால் மக்கள் சற்றே ஆறுதல் அடைந்தனர்.இதற்கிடையே புயல் சின்னம் காரணமாக திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பருவமழை பெய்து வருகிறது. இதனால் சந்தையில் நாட்டு காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. குறிப்பாக மழையினால் காய்கறிகள் வரத்து குறைந்து சில்லரை விலையில் மாற்றம் ஏற்பட்டது. கனமழை காரணமாக மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் காய்கறிகள் உற்பத்தி பாதிக்கப்பட்டதால், திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறிகளின் விலையில் தொடர்ந்து ஏற்ற, இறக்கம் உருவானது.தொடர்ந்து மழை பெய்து வருவதால், இஞ்சி, கொத்தமல்லி தழைகள் சந்தைக்கு வரத்தும் குறைந்துள்ளது. இதனால், காய்கறிகளின் சில்லறை விலையில் நாள்தோறும் மாற்றம் ஏற்பட்டது. பெரும்பாலான காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயராத நிலையில், விலை வீழ்ச்சி அடைந்தது. கத்தரிக்காய், முள்ளங்கி, முள்ளங்கி, பாகற்காய் போன்றவைகளின் சில்லறை விலை உறுதியற்ற தன்மையில் நீட்டித்து வருகிறது.

    வெங்காயம், தக்காளி விலை தவிர மற்ற காய்கறிகளின் விலையில் தொடர்ந்து ஏற்ற, இறக்கம் காணப்பட்டது. திருச்சி மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.டி.மலை, காவல்காரன்பட்டி, தோகைமலை ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் நாட்டு காய்கறிகள் காந்தி மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. காய்கறிகளின் அளவையும், விற்பனை விலையையும் மழையே தீர்மானிக்கிறது. வரத்து சாதாரணமாக இருந்தால், விலை நியாயமானதாக இருக்கும் என்று காய்கறி வியாபாரி கலைவாணன் தெரிவித்தார்.இருப்பினும், வியாபாரிகளுக்கு தேவையான அளவு காய்கறிகள் கிடைக்கவில்லை என்றால், விலை தானாகவே அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும், மழையின் போது பூக்கள் உதிர்ந்து உற்பத்தி பாதிக்கப்பட்டு விலை உயரும் என்றும் கலைவாணன் கூறினார்.மேலும் தேனி, ஊட்டி, கொடைக்கானல், கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்படும் இஞ்சி, மழையால் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. 60 கிலோ எடையுள்ள இஞ்சியின் விலை பொதுவாக 79,000-க்கு விற்கப்படும். ஆனால் தொடர் மழையால் தற்போது ஒரு மூட்டைக்கு ரூ.10,500 ஆக அதிகரித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு கிலோ 150 ஆக இருந்த இஞ்சி விலை நேற்று ரூ.175-க்கு விற்கப்பட்டது.

    Next Story
    ×