search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி பாலக்கரையில் கடை பூட்டை உடைத்து செல்போன்கள் திருட்டு
    X

    திருச்சி பாலக்கரையில் கடை பூட்டை உடைத்து செல்போன்கள் திருட்டு

    • நேற்று இரவு வழக்கம்போல், செல்போன் கடையில் வியாபாரத்தை முடித்துவிட்டு உரிமையாளர்கள் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளனர்
    • அங்கிருந்த சுமார் ரூ.50 ஆயிரத்திற்கும் மேலான செல்போன்கள் மற்றும் உதிரி பாகங்களை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

    திருச்சி:

    திருச்சி பாலக்கரை பருப்புக்கார தெருவில் பகுதியில் திருச்சியை சேர்ந்த 3 பேர் ஒன்றாக இணைந்து செல்போன் கடையை நடத்தி வருகின்றனர். இங்கு புதிய செல்போன்கள் மற்றும் அதற்கான உதிரி பாகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று இரவு வழக்கம்போல், செல்போன் கடையில் வியாபாரத்தை முடித்துவிட்டு உரிமையாளர்கள் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளனர்.

    பின்னர் இன்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, மர்ம நள்ளிரவில் வந்த மர்ம நபர் செல்போன் கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்துள்ளார்.

    பின்னர் அங்கிருந்த சுமார் ரூ.50 ஆயிரத்திற்கும் மேலான செல்போன்கள் மற்றும் உதிரி பாகங்களை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. பின்னர் இது குறித்து அவர்கள் திருச்சி பாலக்கரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை நடத்தினார்கள்.

    மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போன் கடையில் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இதனால் பாலக்கரை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×