search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம்
    X

    திருச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம்

    • திருச்சி கே.கே.நகர் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் அரசு வழிகாட்டுதல் படி நடைபெற்றது
    • மாநகரை சுத்தமாக வைக்கும் விதத்தில் அனைவரும் குப்பைகளை மாநகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் தரம் பிரித்து வழங்க வேண்டும் என மாநகராட்சி உதவி ஆணையர் அறிவுரை

    திருச்சி:

    திருச்சி கே.கே.நகர் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது.

    தலைமை ஆசிரியர் செல்வம் தலைமை தாங்கினார். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகளின் பெற்ேறார்கள், கவுன்சிலர்கள் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    சிறப்பு அழைப்பாளராக திருச்சி மாநகராட்சி மண்டலம் 4 உதவி ஆணையர் சண்முகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    அப்போது அவர் பேசுகையில், மாநகரை சுத்தமாக வைக்கும் விதத்தில் அனைவரும் குப்பைகளை மாநகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் தரம் பிரித்து வழங்க வேண்டும். மக்கும் குப்பை, மக்காத குப்பை, அபாயகரமான கழிவு, மின்கழிவு என்பன அனைத்தையும் சாலைகளில் வீசாமல் குப்பைத் தொட்டியில் முறையாக வைத்திருக்க வேண்டும்.

    மேலும் மக்கும் குப்பைகளை வீட்டிலேயே உரமாக்க முயற்சி செய்யவேண்டும். குப்பைகளை தெருக்கள் மற்றும் திறந்த வெளிகளில் வீசிச்சென்றால் ரூ.500 அபராதம் வழங்கப்படும்.

    அதை பொது மக்கள் யாராவது தகவல் தெரிவித்தால் அதற்கு ரூ.100 பரிசாக வழங்கப்படும் என்று தற்போது மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ஆகவே பொது மக்கள் மாநகரை சுத்தமாக வைத்து கொள்ள தாங்களும் கவனம் செலுத்தவேண்டும் என்று தெரிவித்தார்.

    Next Story
    ×